தேவையானவை:
- முட்டைகோஸ் கால் கிலோ,
- முட்டை 2,
- பெரிய வெங்காயம் 1,
- மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்,
- குடமிளகாய் (சிவப்பு அல்லது பச்சை) 1,
- பூண்டு 4 பல்,
- உப்பு தேவையான அளவு,
- எண்ணெய் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பூண்டை நசுக்கிக்கொள்ளுங்கள். கோஸையும் வெங்காயத்தையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள். குடமிளகாயையும் நீளமான துண்டுகளாக நறுக்குங்கள். (குடமிளகாய் கிடைக்கவில்லை என்றால் பச்சை மிளகாய் உபயோகப்படுத்தலாம்). எண்ணெயை காயவைத்து, நசுக்கிய பூண்டைச் சேருங்கள். அத்துடன், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து சிறிது வதக்கி, முட்டைகோஸ் சேருங்கள். அத்துடன் தேவையான மிளகாய்தூள், உப்பு சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள். முக்கால் பாகம் வெந்த பிறகு, கோஸை கடாயின் ஓரத்துக்கு சுற்றிலும் தள்ளிவிட்டு, அதன் நடுவில் முட்டையை உடைத்து ஊற்றுங்கள். 2 நிமிடம் கழித்து, முட்டையை லேசாகக் கிளறி, உடனேயே சுற்றிலும் உள்ள கோஸை அதன் மேல் இழுத்துவிட்டு, தீயை அதிகப்படுத்துங்கள். சில நிமிடங்கள் கிளறியபின் இறக்கிவிடுங்கள். மலேசியாவில் வழக்கமாக வீடுகளில் செய்யப்படும் சைட்டிஷ் அயிட்டம் இது