தேவையானவை:
- கோதுமை மாவு 2 கப், உப்பு சுவைக்கேற்ப, ச
- ீரகம் கால் டீஸ்பூன்,
- கருஞ்சீரகம் கால் டீஸ்பூன்,
- முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) அரை கப்,
- இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன்,
- பொடியாக நறுக்கிய மல்லித்தழை 3 டீஸ்பூன்,
- எண்ணெய் அல்லது நெய் ஒரு டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: முட்டைகோஸை உப்பு, மஞ்சள்தூள் கலந்து பிசறிவைக்கவும். கோதுமை மாவில் உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். முட்டைக்கோஸைப் பிழிந்து, அதனுடன் மசாலாக்களை சேர்த்து (காலிஃப்ளவர் பூரிக்கு சொன்னது போலவே), அதே செய்முறையில் ஸ்டஃப் செய்து, பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.