...

முந்திரிப்பருப்பு பக்கோடா

தேவையானவை:

  • முந்திரிப்பருப்பு ஒரு கப்,
  • கடலை மாவு 2 டேபிள்ஸ்பூன்,
  • அரிசி மாவு 2 டீஸ்பூன்,
  • கார்ன்ஃப்ளார் 2 டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய்&இஞ்சி விழுது 2 டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
  • உப்பு தேவையான அளவு,
  • எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய் நீங்கலாக, மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து, பிசறிக்கொள்ளுங்கள் (மாவுக்கலவை, முந்திரிப்பருப்பில் நன்கு ஒட்டிக்கொள்ளுமாறு பிசறவேண்டும்). எண்ணெயைக் காயவைத்து, மிதமான தீயில் முந்திரிக் கலவையை உதிர்த்தாற்போல போட்டு, நன்கு ‘மொறுமொறு’ப்பாக வேகவிட்டு எடுங்கள்.

குறிப்பு: நடுத்தரத் தீயில்தான் பக்கோடாக்களை வேகவைக்கவேண்டும். அதிகமான தீயில் வெந்தால், முந்திரிப்பருப்பு கருகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.