...

முள்ளங்கி பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  2 கப்,
  • நெய்  ஒரு டீஸ்பூன்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • முள்ளங்கி  2,
  • மிளகாய்தூள்  ஒரு டீஸ்பூன்,
  • சீரகத்தூள்  ஒரு டீஸ்பூன்,
  • தனியாதூள்  அரை டீஸ்பூன்,
  • அம்சூர்தூள் (மாங்காய்தூள்)  கால் டீஸ்பூன்,
  • கரம் மசாலாதூள்  கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கியைக் கழுவி, தோல் சீவி, துருவிக் கொள்ளவும். நெய்யைக் காயவைத்து, முள்ளங்கியைப் போட்டு வதக்கவும். தண்ணீர் வற்றி, வதங்கியதும், மிளகாய்தூள் முதல் கரம் மசாலா வரை அனைத்துத் தூள்களையும் கலந்து, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இதுதான் ஸ்டஃப் செய்ய வேண்டிய மசாலா. கோதுமை மாவை சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய செப்பு போல செய்து, அதன் நடுவே ஒரு டீஸ்பூன் முள்ளங்கி மசாலாவை வைத்து, பூரியாக தேய்க்கவும். காயும் எண்ணெயில் பொரித் தெடுக்கவும். தக்காளி சாஸ் இதற்கேற்ற ஜோடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.