தேவையானவை:
- புழுங்கலரிசி 1 கப்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- அவல் கால் கப்,
- மோர் 2 டம்ளர்,
- உப்பு தேவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையானது,
- நச்சு கெட்ட (லெச்சகெட்ட) கீரை 30 இலைகள்,
- பச்சை மிளகாய் 2, சின்ன வெங்காயம் 15, பாசிப்பருப்பு கால் கப்,
- உப்பு தேவைக் கேற்ப,
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன்,
- எண்ணெய் 4 டீஸ்பூன்.
செய்முறை: புழுங்கலரிசி முதல் அவல் வரையிலான பொருள்களை 6 லிருந்து 8 மணி நேரம் வரை மோரில் ஊறவைத்து ஆட்டி, உப்பு சேர்த்து சிறிது புளிக்க விடவும். கீரையின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நடுவில் வகுந்துகொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை அரைப்பதமாக வேகவிட்டு, நீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிப்பவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை சேர்த்து கிளறி, வெந்ததும் உப்பு சேர்க்கவும். கடைசியாக, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கிளறி எடுக்கவும். தோசை மாவை வட்டமாக மெல்லிய ஊத்தப்பமாக ஊற்றி சுற்றிவர எண்ணெய் விட்டு மூடவும். அடிப்புறம் வெந்ததும் மூடியைத் திறந்து அதன் மேல் கீரையை பரப்பிவிட்டு தோசைக் கரண்டியால் அழுத்தி விட்டு மறுபுறம் திருப்பாமல் எடுத்து பரிமாறவும். இந்தக் கீரை தோசை உடல்வலிக்கு நிவாரணம் தரும்