...

மெதுவடை

தேவையானவை:

  • உளுத்தம்பருப்பு  1 கப்,
  • வடித்த சாதம்  1 கைப்பிடி,
  • பச்சை மிளகாய்  2, இஞ்சி  1 துண்டு,
  • பெருங்காயம்  அரை டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை  சிறிது,
  • மல்லித்தழை  சிறிது,
  • உப்பு  ருசிக்கேற்ப,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சாதத்துடன் சேர்த்து நன்கு அரையுங்கள். பெருங்காயத்தை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது மாவில் தெளித்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் வழித்து எடுங்கள்.

பச்சை மிளகாய், இஞ்சியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, மாவில் சேருங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேருங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசைந்து சிறு சிறு வடைகளாக காயும் எண்ணெயில் சுட்டெடுங்கள். பஞ்சு போன்ற மெதுவடை தயார்.

1 Comment

  • Wayne , June 30, 2024 @ 7:07 am

    Hello there, just became aware of your blog through Google,
    and found that it is truly informative. I am going to watch out for brussels.

    I’ll be grateful if you continue this in future.
    Many people will be benefited from your writing.
    Cheers! Escape room lista

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.