தேவையானவை:
- கடலை மாவு 1 கப்,
- பெரிய வெங்காயம் 1,
- இஞ்சி 1 துண்டு,
- பச்சை மிளகாய் 2,
- கறிவேப்பிலை சிறிது,
- மல்லித்தழை சிறிது,
- நெய் அல்லது டால்டா 2 டேபிள்ஸ்பூன்,
- உப்பு சுவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை தோல்நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். டால்டா, எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக பிசறிக்கொள்ளுங்கள். டால்டாவை உருக்கி சூடாக மாவில் சேர்த்துப் பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். சிறிதளவு தண்ணீரை மாவில் தெளித்து, சேர்ந்தாற்போல பிசறி, காயும் எண்ணெயில் உதிர்த்து விடுங்கள். நன்கு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.