ரவை பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  ஒன்றரை கப்,
  • பாம்பே ரவை  அரை கப்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • சீரகம்  கால் டீஸ்பூன்,
  • பொடியாக நறுக்கிய மல்லித்தழை  ஒரு டீஸ்பூன்,
  • இஞ்சிபச்சை மிளகாய் விழுது  அரை டீஸ்பூன்,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, பூரிகளாகத் தேய்த்து, எண்ணெயில் போட்டு சிவக்க வேகவிட்டு எடுக்கவும். ரவை சேர்ந்திருப்பதால், இது மொறுமொறுவென வெந்து, சாப்பிடும்போது ‘கடக், மொடக்’கென கடிபடும். எனவே இதை வட இந்தியாவில் ‘ரவா கடக் பூரி’ என்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *