தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு – 2, எலுமிச்சம்பழச் சாறு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 ஆர்க்கு, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு, தூள் உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க: எண்ணெய் – 4 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, உதிர்த்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். உதிர்த்த கிழங்குடன் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து பிசறவும். வாணலியில் எண்ணெயை சூடு செய்து தாளிப்பவற்றை போட்டு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் பிசறிய கிழங்கை சேர்த்து சூடு வரக் கிளறி, தேங்காய் துருவலையும் தூவி கிளறி இறக்கவும்.