தேவையானவை:
- வாழைக்காய் 1,
- கடலை மாவு 1 கப்,
- கார்ன்ஃப்ளவர் 1 டேபிள்ஸ்பூன்,
- சோம்பு தூள் அரை டீஸ்பூன்,
- பூண்டு விழுது 1 டீஸ்பூன்,
- மிளகாய்தூள் 1 டீஸ்பூன்,
- உப்பு சுவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு,
- ஆப்ப சோடா சிட்டிகை
செய்முறை: வாழைக்காயின் இரு பக்கங்களிலும் சிறிது தோலை விட்டு விட்டு மீதமுள்ளதை சீவி எடுத்து விடுங்கள். பின் நீளவாக்கில் இரண்டாக வெட்டி, இரு ஓரங்களிலும் சிறிது தோல் இருக்குமாறு விட்டுவிட்டு, மெல்லியதாக நறுக்குங்கள்.
எண்ணெய் நீங்கலாக மாவுடன் மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயை காய வைத்து ஒவ்வொரு துண்டையும் மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். தேங்காய் சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன்.