தேவையானவை: மைதாமாவு & அரை கப், வாழைப்பழம்& 2, தேங்காய் துருவல் & அரை கப், சர்க்கரை & இனிப்புக்கேற்ப, ஏலக்காய்தூள் & ஒரு சிட்டிகை.
செய்முறை: வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து, அதில் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதாமாவை தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாழைப்பழ உருண்டைகளை, மாவு கரைசலில் தோய்த்து, மிதமான தீயில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பணியாரக் கல்லிலும் வேகவைக்கலாம்.