தேவையானவை:
- பச்சரிசி ஒரு கப்,
- வெள்ளரித் துருவல் அரை கப்,
- பச்சை மிளகாய் 4,
- இஞ்சி ஒரு துண்டு,
- எலுமிச்சம்பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்,
- மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
- பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு,
- கறிவேப்பிலை சிறிதளவு.
தாளிக்க:
- கடுகு,
- உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்,
- நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து, வெள்ளரி துருவலையும் உப்பையும் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி இறக்குங்கள். அந்தக் கலவை யுடன் சாதம், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.