வேப்பம்பூ வெல்ல பச்சடி

தேவையானவை:

  • காய்ந்த வேப்பம்பூ   ஒரு கப்,
  • நெய்   ஒரு டேபிள்ஸ்பூன்,
  • மண்டை வெல்லத்தூள்   ருசிக்கேற்ப,
  • புளி   ஒரு சுளை,
  • பச்சைமிளகாய் (விருப்பப்பட்டால்)   2,
  • உப்பு   ஒரு கல்,
  • கடுகு   அரை டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை   2 ஆர்க்கு.

செய்முறை: வேப்பம்பூவை நெய் விட்டுப் பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். பூவில் புளிக்கரைசல் ஊற்றி, (பிரியப்பட்டால்) மிளகாய் நறுக்கிப் போட்டுத் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

அத்தோடு வெல்லம் போட்டுக் கரைந்ததும் கடுகு தாளித்து விட்டு இறக்கவும். வெல்லம் கொதிக்கும்பொழுது ஒரு கல் உப்புப் போட்டால் இனிப்பு தூக்கலாக இருக்கும். இதைத் தமிழ் வருடப் பிறப்பன்று பலரும் வீட்டில் செய்வார்கள்.

குறிப்பு: இந்தப் பச்சடி உடம்புக்கு, முக்கியமாக பித்தத்துக்கு மிகவும் நல்லது.