தேவையானவை:
- வேர்க்கடலைப் பருப்பு (வறுக்காதது) 2 கப்,
- கடலை மாவு ஒன்றேகால் கப்,
- அரிசி மாவு கால் கப்,
- மிளகாய்தூள் இரண்டரை டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன் (அல்லது) இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்,
- உப்பு சுவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள் (அல்லது) இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்துப் பிசறிவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிசறி, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள்.