...

ஸ்டஃப்டு கோவைக்காய்

தேவையானவை:

  • கோவைக்காய்  கால் கிலோ,
  • மிளகாய்தூள்  முக்கால் டீஸ்பூன்,
  • மல்லித்தூள்  முக்கால் டீஸ்பூன்,
  • உப்பு  தேவையான அளவு,
  • சீரகம்  அரை டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை  சிறிதளவு,
  • மல்லி இலை  தேவையான அளவு,
  • எண்ணெய்  3 டேபிள்ஸ்பூன்,
  • கறி மசாலாதூள்  ஒரு சிட்டிகை.

செய்முறை: கோவைக்காயைக் கழுவி ஒன்றை நான்காக வகிர்ந்து கொள்ளவும். ஒரு தட்டில் மிளகாய்தூள், மல்லித்தூள், உப்பு, கறி மசால் எல்லாவற்றையும் போட்டு சேர்த்துக் கலக்கவும். கலந்த பொடியை கோவைக்காய்க்குள் அடைக்கவும். சட்டியில் சீரகம் தாளித்து, கோவைக்காயைப் போட்டு, மெல்லிய தீயில் வதக்கி இறக்கவும்.

X
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.