தேவையானவை:
- பாஸ்மதி அரிசி ஒரு கப்,
- தக்காளி 3,
- வெங்காயம் 2,
- பச்சைமிளகாய் 1,
- கறிவேப்பிலை சிறிது,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
வறுத்து பொடிக்க:
- தனியா ஒரு டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 2,
- கொப்பரைத் துருவல் 2 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியுடன் சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பொடிக்க கொடுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து சிவப்பாக வறுத்து அரைத்துக் கொள்ளுங்கள். நெய், எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்கள் சேர்த்து, பொன்னிற மாக வறுங்கள். வெங்காயத்தை நிறம் மாறும் வரை நன்கு வதக்குங்கள். அதில், தக்காளி, பச்சைமிளகாய், மஞ்சள் தூள், சிட்டிகை உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை நன்கு வதக்குங்கள். இதனுடன் வடித்த சாதம், பொடித்த பொடி, கறிவேப்பிலை, மேலும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறுங்கள்.
குறிப்பு: புளிப்பு
குறைவாக இருந்தால் 2
டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.