தேவையானவை: கத்தரிக்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2, மிளகாய்தூள் – 3 டீஸ்பூன் அல்லது பச்சை மிளகாய் – 6, முதல் தேங்காய்ப்பால் – அரை கப், இரண்டாம் தேங்காய்ப்பால் – ஒன்றரை கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பூண்டு – 6 பல், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – தேவையான அளவு. தாளிக்க: பட்டை – 2, கறிவேப்பிலை – சிறிது, வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கத்தரிக்காயை காம்பு நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து நறுக்கியதை பொரித்தெடுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். பூண்டை தோலுரித்து நசுக்குங்கள். இரண்டாம் தேங்காய்ப்பாலில் வெங்காயம், மிளகாய்தூள் அல்லது சிறிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து விடாமல் கிளறி வேகவிடுங்கள். வெந்ததும் கத்தரிக்காய் துண்டுகள், முதல் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை தாளித்து கொட்டிப் பரிமாறுங்கள்.