தேவையானவை: உதிர்த்த கறிவேப்பிலை – 2 கப், புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – கால் கப். வறுத்து அரைக்க: மிளகாய் – 10, கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை: கறிவேப்பிலையை சிறிது சிறிதாக வெறும் கடாயில் மொறுமொறுப்பாக வறுத்துக்கொள்ளுங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை, சிறிது எண்ணெயைக் காயவைத்து ஒன்றாக சிவக்க வறுத்து கறிவேப்பிலையுடன் சேர்த்து நன்கு பொடித்துக்கொள்ளுங்கள். புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் பொடித்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து புளிக்கரைசலை ஊற்றுங்கள். நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்குங்கள்.
இரண்டு நாட்கள் ஆனாலும் இந்தக் ஆகியவற்றுக்கு சுவையான ஜோடி.இரண்டு நாட்கள் ஆனாலும் இந்தக் குழம்பு நன்றாக இருக்கும். இட்லி, தோசை, சூடான சாதம் ஆகியவற்றுக்கு சுவையான ஜோடி.இரண்டு நாட்கள் ஆனாலும் இந்தக் ஆகியவற்றுக்கு சுவையான ஜோடி.