...

உருளைக்கிழங்கு பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  2 கப்,
  • உருளைக்கிழங்கு  2,
  • எண்ணெய் அல்லது நெய்  ஒரு டீஸ்பூன்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • பச்சை மிளகாய்  2, இஞ்சி (துருவியது)  1 டீஸ்பூன்,
  • பொடியாக நறுக்கிய மல்லித்தழை  2 டீஸ்பூன்,
  • சீரகம்  கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன், சீரகம், உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய், தேவையான தண்ணீர் ஊற்றிப் பிசையவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்துக்கொள்ளவும். பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். மசித்த கிழங்குடன், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை சேர்த்துக் கெட்டியாகக் கிளறிவைக்கவும்.

கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, பூரிகளாகத் திரட்டவும். எண்ணெயைக் காயவைத்து, பூரிகளைப் பொரித்தெடுக்கவும். சுவையான இந்த பூரிக்கு, மசாலா தயிர் நல்ல காம்பினேஷன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.