...

கொத்தவரங்காய் பொரியல்

தேவையானவை:

  • கொத்தவரங்காய்  கால் கிலோ,
  • புளி  ஒரு சுளை,
  • மிளகாய்தூள்  அரை டீஸ்பூன்,
  • உப்பு  தேவையான அளவு,
  • கடுகு, உளுத்தம்பருப்பு  தலா (தாளிப்பதற்கு) தேவையான அளவு.

செய்முறை: புளியை தண்ணீரில் நனைத்து வைக்கவும். கொத்தவரங்காயை நீளத் துண்டுகளாக நறுக்கி லேசாக வதக்கி, குக்கரில் 3 விசில் வரை வேக விடவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து காயை வதக்கவும். காய் கொஞ்சம் வதங்கியதும், உப்பு, மிளகாய்தூள் சேர்த்துப் பிரட்டி, புளியும் கொஞ்சம் கரைத்து விடவும். காய் நன்கு வதங்கியதும் இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.