வெண்டைக்காய் பொரியல்

தேவையானவை:

  • வெண்டைக்காய்  கால் கிலோ,
  • சின்ன வெங்காயம்  சிறிதளவு,
  • உப்பு  தேவைக்கேற்ப,
  • கறிவேப்பிலை  கொஞ்சம்,
  • கடுகு,
  • உளுத்தம்பருப்பு  தலா தேவையான அளவு,
  • தயிர்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • மிளகு பொடி _ ஒன்றரை டீஸ்பூன்.

செய்முறை: சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்கவும். வெண்டைக்காயைக் கழுவி ரொம்பத் தகடாக இல்லாமல், கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பை எண்ணெயில் போட்டுத் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெண்டைக்காயைப் போட்டுப் பிரட்டி, மூடி வைத்து சிறு தீயில் வதக்கவும். வெண்டைக்காய் கொழ கொழ என்று இருந்தால் தயிரையும் ஊற்றிக் கிளறவும். காய் வதங்கியதும் மிளகு பொடி தூவி இறக்கவும். மழைக்காலத்தில் ரசம், மிளகு சாதம், பொரிச்ச குழம்பு போன்ற மிளகு சேர்ந்த பதார்த்தங்களுக்கு சூப்பர் ஜோடி இந்தப் பொரியல். மிளகு பொடி தயாரிக்க: மிளகு  2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு  ஒன்றரை டேபிள்ஸ்பூன், சீரகம்  ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை  ஒரு கைப்பிடி, உப்பு  ருசிக்கேற்ப. எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். உளுத்தம்பருப்பை மட்டும் கடைசியாகப் போட்டு, 2 சுற்றுச் சுற்றி எடுக்கவும். பொரியல்களுக்குப் போடவும் சாதத்தில் நெய்யுடன் போட்டு சாப்பிடவும் இந்தப் பொடி சூப்பராக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *