தேவையானவை:
- வாழைக்காய் 3.
- மசாலாவிற்கு:
- தேங்காய் துருவல் கால் மூடி,
- வரமிளகாய் 2, சீரகம் அரை டீஸ்பூன்,
- சின்ன வெங்காயம் நான்கைந்து,
- பூண்டு 2 பல், உப்பு தேவையான அளவு,
- எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தலா தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை வில்லைகளாக நறுக்கி வேகவிட்டு, உப்புப் போட்டு இறக்கவும். அதிகமாக இருக்கும் நீரை வடித்து விடவும். மசாலாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சாமான்களை கரகரவென்று அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு போட்டு, கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு போட்டு, அது சிவந்ததும் கறிவேப்பிலை போடவும். வெந்த காயைச் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் கழித்து அரைத்த மசாலா சேர்த்து, சுருள வதங்கியதும் இறக்கவும்.