தேவையானவை:
- வாழைத்தண்டு ஒரு நீளத்துண்டு,
- வரமிளகாய் 2, சிறு பருப்பு கைப்பிடியளவில் பாதி,
- தேங்காய் துருவல் கால் மூடி,
- மோர் ஒரு கிண்ணம்,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் தண்ணீர் விட்டு சிறு பருப்பை வேக விடவும். வாழைத்தண்டை நறுக்கி மோர் கலந்த நீரில் போடவும். (அப்பொழுதுதான் கறுக்காமல் இருக்கும்). சிறு பருப்பு 5 நிமிடம் வெந்ததும், வாழைத்தண்டைப் போட்டு அது வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி, அதிகப்படியான தண்ணீரை வடித்து விடவும். இரும்புச் சட்டியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, வாழைத்தண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தப் பொரியல் உடம்புக்கு மிகவும் நல்லது. அடிக்கடி செய்து சாப்பிட்டால் மெலிந்த உடல்வாகைப் பெறலாம். சிறுநீர், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கும் இது மருந்தாகும், உணவாகும்.