தேவையானவை:
- சின்ன வெங்காயம் கால் கிலோ,
- மிளகாய்தூள் முக்கால் டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
அரைக்க: தேங்காய்த் துருவல் கால் மூடி, சீரகம் அரை டீஸ்பூன். செய்முறை: வெங்காயத்தை உரித்துப் பொடியாக நறுக்கவும். தேங்காயுடன் சீரகத்தைச் சேர்த்து கரகரவென்று அரைக்கவும். வாணலியில் தாளித்து போட்டு வெங்காயத்தைச் சேர்த்து அது கண்ணாடி போல் ஆகும் வரை வதக்கவும். வதங்கிய வெங்காயத்துடன் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து, அரைத்த தேங்காயையும் போட்டுப் பிரட்டி இறக்கவும்.