...

உருளைக்கிழங்கு குழம்பு

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு – 1, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 10 பல், தக்காளி – 1, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவைக்கேற்ப, சாம்பார்பொடி – 4 டீஸ்பூன்.

விழுதாக அரைக்க: துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 2, சோம்பு – கால் டீஸ்பூன், பூண்டு – 2 பல்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், வெந்தயம் – 15, பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நீளவாட்டில் சற்று கனமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு + வெங்காயத்தின் தோலை உரித்தெடுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைப்பவற்றை அரைத்தெடுக்கவும். புளி + உப்பை 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, அத்துடன் சாம்பார் பொடியை கலக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து தாளிப்பவற்றை தாளித்து பூண்டு + வெங்காயத்தை வதக்கி, பின் தக்காளி + உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கரைத்த புளி + சாம்பார்பொடி கலந்த நீரை அதில் ஊற்றி நன்கு கொதித்து சற்று கெட்டியானதும் அரைத்த விழுதை சேர்த்து கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.