...

வள்ளிக்கிழங்கு பொரியல்

தேவையானவை: நடுத்தர அளவில் வள்ளிக்கிழங்கு – 3, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப, துருவிய தேங்காய் – 4 டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் – 4 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3-லிருந்து 4, கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.

செய்முறை: வள்ளிக்கிழங்கின் தோலை நீக்கி சற்று கனமான வளையத் துண்டுகளாக நறுக்கி தண்ணீர் + மஞ்சள்தூள் சேர்த்து வெந்ததும் உப்பு சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து இறக்கி நீரை வடித்துவிட்டு, வாணலியில் எண்ணெய் விட்டு தாளிப்பவற்றை போட்டு தாளித்து அதில் வேகவைத்த கிழங்குத் துண்டுகளையும் சேர்த்து கிளறி, அதன் மேல் தேங்காய் துருவலைத் தூவி கிளறி சூடானதும் இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.