தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு – 2, துருவிய தேங்காய் – அரை கப், மிளகாய் – 10, பூண்டு – 2 பல், பெரிய வெங்காயம் – 2, சோம்பு – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை: உருளைக்கிழங்கை தோல் நீக்கி சற்று கனமான வளையங்களாக நறுக்கவும். தேங்காய், பூண்டு, வெங்காயம், மிளகாய், சோம்பு, உப்பு இவற்றை விழுதாக அரைக்கவும். உருளையை அரைப்பதமாக உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின் அரைத்ததை கிழங்கின் இருபுறமும் நன்கு தடவவும். அடுப்பில் தோசைக்கல்லை சூடு செய்து அதில் 4 அல்லது 5 துண்டுகளாக பரப்பி அதைச் சுற்றி எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும், மறுபுறமும் திருப்பிவிட்டு ரோஸ்டாக வேகவைத்து எடுக்கவும். இவ்வாறு எல்லாத் துண்டுகளையும் வேகவைத்து எடுக்கவும். சூடான சாப்ஸ் ரெடி.