தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், பால் & அரை கப், ஆப்பசோடா & அரை சிட்டிகை, உப்பு & அரை டீஸ்பூன், எண்ணெய் & பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் பால், உப்பு, சோடா சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பரோட்டாவுக்கு சொன்ன செய்முறையில், பூரியை விட சற்றுப் பெரிய அளவில் திரட்டிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பரோட்டாக்களைப் பொரித்தெடுங்கள். விருதுநகர் மாவட்டத்து ஸ்பெஷல் பரோட்டா இது.