தேவையானவை: மக்காச்சோள மணிகள் (வேகவைத்தது) & ஒரு கப், பிரெட் & ஒரு பாக்கெட், பச்சை மிளகாய் & 3 (விருப்பப்பட்டால்), சர்க்கரை & 2 டீஸ்பூன், அரிசிமாவு (அல்லது) கடலைமாவு & 3 டேபிள்ஸ்பூன், நெய் & 2 டேபிள்ஸ்பூன், பால் & 2 கப், உப்பு & சுவைக்கேற்ப.
செய்முறை: ஒரு வாணலியில் நெய்யைக் காயவைத்து, அதில் அரிசிமாவு அல்லது கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும். அடுப்பில் இருந்து மாவை இறக்கி, அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து, கட்டி இல்லாதவாறு நன்றாக கலக்கவும். மறுபடியும் அடுப்பில் வைத்து, இந்தக் கலவையை பேஸ்ட் ஆகும் வரை கிளறவும். பிறகு, வேக வைத்துள்ள சோளமுத்துக்கள், சர்க்கரை, (தேவையானால்) பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். பிரெட்டை டோஸ்ட் செய்து, இந்தக் கலவையை பிரெட்டின் மேல் பரப்பிக் கொடுக்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடு வார்கள். இரண்டு பிரெட்டுக்கும் நடுவே கார்ன் கலவையை வைத்து, டோஸ்ட் செய்தும் கொடுக்கலாம். பிரெட்டில் ஜாம் மட்டுமே தடவிச் சாப்பிட்டு அலுத்துப்போன சுவையைத் தரும். சத்துள்ள டிபனும் கூட.