தேவையானவை: பிரெட் & 4 முதல் 5 ஸ்லைஸ்கள், பிஸ்கட் & 5 முதல் 6 (மாரி பிஸ்கட்), சர்க்கரை (பொடித்தது) & கால் கப், பழத்துண்டுகள் & ஒரு கப், பால் & சிறிதளவு.
செய்முறை: மிக்ஸியில் பிரெட்களை ஒரு சுற்றுச் சுற்றி தூளாக்கிக் கொள்ளவும். இதேபோல் மாரி பிஸ்கட்களையும் பொடித்துக் கொள்ளவும். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் இவற்றை போட்டு, சர்க்கரை தூளையும் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, சிறிது சிறிதாக பாலை தெளித்து, கரண்டியால் நன்றாக அழுத்தவும். இதை ஃபிரிட்ஜில், சிறு சிறு கிண்ணங்களில் 2 முதல் 3 மணி நேரம் வைத்தால், நன்றாக ‘செட்’டாகி விடும்.
பரிமாறும்போது, இந்த பிஸ்கட் + பிரெட் கலவை மேல் பழத்துண்டு களை வைத்து பரிமாறவேண்டும். ‘ஜில்’லென்று சூப்பர் ருசி தரும் இந்த கஸாட்டா.
குறிப்பு: தேவையானால் சிறிதளவு ஐஸ்கிரீம், டூட்டி&ஃப்ரூட்டி, செர்ரி சேர்த்து பரிமாறலாம். அல்லது கண்டென்ஸ்டு மில்க் மற்றும் பழங்கள் கலந்தும் பரிமாறலாம். டிரைஃப்ரூட்ஸ், நட்ஸ் கலப்பது இன்னொரு சாய்ஸ்.