தேவையானவை:
- பழுத்த தக்காளி 5,
- வெங்காயம் 3,
- இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்,
- மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்,
- மல்லித்தழை ஒரு கைபிடி அளவு,
- கறிவேப்பிலை சிறிது,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- சோம்பு கால் டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு (விருப்பப்பட்டால்) 2 டீஸ்பூன்,
- எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேருங்கள். பச்சை வாசனை போக வதங்கியதும், தக்காளி, மிளகாய்தூள் சேர்த்து நன்கு சுருள கிளறி மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து, மேலும் சற்று கிளறி இறக்குங்கள்.
பயணத்துக்கு ஏற்ற பலே ருசி தொக்கு!