தேவையானவை:
- பழுத்து சிவந்த தக்காளி 8,
- காரமான பச்சைமிளகாய் 12 முதல் 15,
- மிளகாய்தூள் அரை டீஸ்பூன்,
- புளி விழுது 3 டேபிள்ஸ்பூன்,
- மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிது,
- உப்பு தேவையான அளவு,
தாளிக்க:
- கடுகு ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய் அரை கப்,
- பெருங்காயம் அரை டீஸ்பூன்.
செய்முறை: தக்காளியுடன் புளி விழுது, மிளகாய்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கைகளால் கரைத்துக் கொள்ளுங்கள்.
பச்சைமிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து பச்சைமிளகாய் சேருங்கள். பச்சை மிளகாய் நன்கு நிறம் மாறி வதங்கியதும் கரைத்த விழுதை அதில் சேருங்கள். நன்கு எண்ணெய் கசிந்து வந்து சேர்ந்தாற் போல் கெட்டியானதும் இறக்குங்கள்.
தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ள தேவாமிர்தம்!