தேவையானவை:
- முட்டைகோஸ் 100 கிராம்,
- பச்சை மிளகாய் 2,
- தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்,
- சின்ன வெங்காயம் ஐந்தாறு,
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- தயிர் 2 கப்,
- உப்பு திட்டமாக,
- எண்ணெய் ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
- பொடியாக நறுக்கிய மல்லித்தழை,
- கறிவேப்பிலை தலா சிறிதளவு.
செய்முறை: கோஸைத் துருவிக்கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக்கொண்டு வெங்காயம், மிளகாயை வதக்கவும். கோஸையும் சேர்த்து லேசாக வதக்கி இறக்கி, உப்பு, தேங்காய் துருவல், மல்லித்தழை சேர்க்கவும். பரிமாறும் முன் தயிர் சேர்க்கவும்