தேவையானவை:
- கெட்டித் தயிர் ஒரு கப்,
- உளுத்தம்பருப்பை வறுத்து அரைத்த மாவு 2 டீஸ்பூன்,
- கடுகு கால் டீஸ்பூன்,
- பச்சை மிளகாய் 2,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- சீரகம் கால் டீஸ்பூன்,
- கறிவேப்பிலை 2 ஆர்க்கு,
- மல்லித்தழை கைப்பிடி அளவு,
- உப்பு திட்டமாக,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தயிரில் உப்பையும், உளுந்த மாவையும் கலக்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கித் தயிரில் கொட்டவும். சீரகத்தை உள்ளங்கையில் வைத்து நன்கு தேய்த்துப் போட்டு, நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும். மணமாகவும் ருசியாகவும் இருக்கும் இந்தப் பச்சடி.