தேவையானவை:
- பெரிய வெங்காயம் 2,
- புளி சிறிய எலுமிச்சம்பழ அளவு,
- காய்ந்த மிளகாய் 2,
- பச்சை மிளகாய் 2,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- கடுகு கால் டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- உப்பு திட்டமாக,
- மல்லித்தழை,
- கறிவேப்பிலை தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு வதக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, புளியைக் கரைத்துவிட்டு உப்புச் சேர்க்கவும். காய் வெந்து பச்சடி கெட்டியானதும் இறக்கி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும். சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் இந்த மலபார் பச்சடி.