வெஜிடபுள் தோசை

தேவையானவை:

  • ஆலு தோசைக்கான மாவு   2 கப்,
  • கேரட்   1,
  • பீன்ஸ்   2,
  • பட்டாணி (உரித்தது)   2 டேபிள்ஸ்பூன்,
  • பெரிய வெங்காயம்   1,
  • பச்சை மிளகாய்   2,
  • குடமிளகாய்   1,
  • தக்காளி   1,
  • எண்ணெய்   தேவையான அளவு.

தாளிக்க: கடுகு   கால் டீஸ்பூன், சீரகம்   அரை பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள்   கால் கப். டீஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) அல்லது

செய்முறை: கேரட்டைக் கழுவி துருவிக் கொள்ளவும். வெங்காயம், பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். குடமிளகாயையும் தக்காளியையும் மெல்லிய அரை வட்டங்களாக நறுக்கவும். வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிப்பவற்றை தாளித்து சிவந்ததும், கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தோசை மாவுடன் சேர்த்து கலக்கவும். பின்னர் தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி (சற்று கனமாக), அதன் மேல் நறுக்கிய அரை வளையங்களான தக்காளி குடமிளகாயை பதித்து, மேலே மல்லித்தழை அல்லது வெங்காயத் தாள் தூவவும். சுற்றிவர எண்ணெய்விட்டு மூடி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு எண்ணெய் ஊற்றி, வெந்ததும் எடுத்துவிடவும். பார்ப்பதற்கு இது வெஜிடபுள் பீட்ஸா போல இருக்கும். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் வெகு ஜோர்!