தேவையானவை:
- கடலைப்பருப்பு அரை கப்,
- பாசிப்பருப்பு அரை கப்,
- வெல்லத்தூள் ஒரு கப்,
- ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன்,
- தேங்காய் துருவல் அரை கப்,
- நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பருப்புகள் இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இட்லிப் பாத்திரத்தில் வைத்து, ஆவியில் வேகவைத்து ஆற வைத்து உதிர்த்துக்கொள்ளுங்கள். வெல்லத்தை கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் கொதிக்கவிட்டு நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்தூள், வேக வைத்து உதிர்த்த பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.