தேவையானவை:
- முந்திரிப்பருப்பு 100 கிராம்,
- கடலை மாவு 1 கப்,
- மிளகாய் தூள் 1 டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
- உப்பு சுவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் நீங்கலாக, மீதி எல்லாப் பொருட்களையும் பிசறுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். பிசறிய கலவையில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயில் உதிர்த்துவிடுங்கள். நடுத்தரத் தீயில் வேகவிடுங்கள். இல்லையெனில், முந்திரிப்பருப்பு கருகிவிடும்.