தேவையானவை:
- பிரெட் 4 ஸ்லைஸ்,
- கடலை மாவு 1 கப்,
- அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்,
- மிளகாய்தூள் 1 டீஸ்பூன்,
- பெருங்காயம் அரை டீஸ்பூன்,
- உப்பு சுவைக்கேற்ப,
- ஆப்ப சோடா ஒரு சிட்டிகை,
- பெரிய வெங்காயம் 2,
- மல்லித்தழை சிறிது,
- எண்ணெய் தேவையான அளவு.
பச்சை சட்னிக்கு:
- புதினா அரை கப்,
- மல்லி அரை கப்,
- பச்சை மிளகாய் 1,
- எலுமிச்சம்பழச் சாறு 1,
- உப்பு சுவைக்கேற்ப.
கார (சிவப்பு) சட்னிக்கு:
- காய்ந்த மிளகாய் 6,
- பூண்டு 3 பல்,
- வெல்லம் 1 சிறிய துண்டு,
- உப்பு சுவைக்கேற்ப.
- புளி
செய்முறை: சட்னிகள் இரண்டையும் தனிதனியே நைஸாக அரையுங்கள். வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்குங்கள். பிரெட்டின் ஓரங்களை வெட்டுங்கள். குறுக்காக வெட்டி முக்கோண துண்டுகளாக்குங்கள். ஒரு துண்டின் மேல் பச்சை சட்னி, மற்றொன்றின் மேல் கார சட்னி தடவுங்கள். கடலை மாவு முதல் ஆப்ப சோடா வரை ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். சட்னி (பச்சை) தடவிய பிரெட் ஸ்லைஸின் மேல் சிறிது வெங்காயம், மல்லித்தழை தூவி கார சட்னி ஸ்லைஸால் மூடுங்கள். எண்ணெயை காய வைத்து பிரெட் ஸ்லைஸ்களை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுங்கள்.