கார்ன் பக்கோடா

தேவையானவை:

  • பேபிகார்ன்  10,
  • கடலை மாவு  முக்கால் கப்,
  • கார்ன்ஃப்ளவர்  1 டேபிள்ஸ்பூன்,
  • மைதா மாவு  1 டேபிள்ஸ்பூன்,
  • சோயா சாஸ்  2 டீஸ்பூன்,
  • உப்பு  சுவைக்கேற்ப.

அரைக்க: பச்சை மிளகாய்  2, இஞ்சி  1 துண்டு, பூண்டு  4 பல்.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சற்றுக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பேபிகார்னை சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகக் கலந்து, தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயைக் காயவைத்து, சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு வேகவிட்டு எடுங்கள். புதுமையான, சுவையான பக்கோடா இது.