தேவையானவை:
- பால் 4, ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி ஒரு கப்,
- நெய் 4 டேபிள்ஸ்பூன்,
- சர்க்கரை ஒரு கப்,
- பால்கோவா கால் கப்,
- பச்சை நிற ஃபுட் கலர் சிறிதளவு,
- பாதாம்பருப்பு (மெல்லியதாக சீவி நெய்யில் வறுத்தது) ஒரு டேபிள்ஸ்பூன்,
- ஏலக்காய்தூள் சிறிதளவு.
செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து, அது முக்கால் பாகமாக (அதாவது 3 கப் அளவுக்கு) ஆகும் வரை காய்ச்சுங்கள். கோவாவை உதிர்த்து, அதில் சேருங்கள். மற்றொரு பாத்திரத்தில் பட்டாணியை (உப்பு சேர்க்காமல்) வேகவையுங்கள். வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு, பட்டாணியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதை நெய் சேர்த்து, அடுப்பில் வைத்து, சிறுதீயில் நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் இதை பாலுடன் சேருங்கள். அத்துடன் பாதாம், ஏலக்காய்தூள், பச்சை கலர் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிட்டு, குளிரவைத்துப் பரிமாறுங்கள்.