தேவையானவை:
- முருங்கைக்காய் 4,
- கத்திரிக்காய் 150 கிராம்,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு, உளுத்தம்பருப்பு,
- கறிவேப்பிலை தலா சிறிதளவு,
- எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன்.
பொரிக்கறி மாவு தயாரிக்க:
- பச்சரிசி மாவு 2 கைப்பிடி,
- கொத்தமல்லி விதை (தனியா) அரை கைப்பிடி,
- உளுத்தம் பருப்பு அரை கைப்பிடி.
- விரளி மஞ்சள் 1,
- வரமிளகாய் 10.
செய்முறை: பொரிக்கறி மாவுக்குக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து ஒன்றாகப் போட்டு திரிக்கவும். இதுதான் பொரிக்கறி மாவு. கத்திரிக்காய், முருங்கைக்காயை உப்புப் போட்டு வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் தாளிதம் போட்டு, வெந்த காய்களை வதக்கி ஒன்றரை டீஸ்பூன் பொரிக்கறி மாவு தூவிக் கிளறி இறக்கவும். தனியான ருசி கிடைக்கும்.