தேவையானவை:
- முளைக்கீரை ஒரு கட்டு,
- தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்,
- வரமிளகாய் 1,
- சின்ன வெங்காயம் ஐந்தாறு,
- வெள்ளை சுண்ணாம்பு ஒரு துளி,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கிக் கழுவி வைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வரமிளகாய் கிள்ளிப்போட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். திட்டமாகத் தண்ணீர் விட்டு, அது கொதித்ததும் கொஞ்சமாகச் சுண்ணாம்பு போட்டு அது கரைந்ததும் கீரையைப் போடவும். கீரை வெந்ததும் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையிலும் இதே போல பொரியல் செய்யலாம். சுண்ணாம்பு சேர்ப்பதால் கீரை நிறம் மாறாமல் பச்சையாகவே இருக்கும்.