தேவையானவை:
- சேனைக்கிழங்கு கால் கிலோ,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- எண்ணெய்,
- உப்பு தேவையான அளவு,
- கார்ன்ஃப்ளார் ஒன்றரை டீஸ்பூன்.
அரைக்க:
- சோம்பு ஒரு டீஸ்பூன்,
- பூண்டு 6 பல்,
- சின்ன வெங்காயம் 5,
- மிளகு அரை டீஸ்பூன்,
- வரமிளகாய் 2,
- தேங்காய் ஒரு துண்டு.
செய்முறை: சேனைக்கிழங்கை ஒரு இன்ச் அளவு கனமுள்ள துண்டுகளாக நறுக்குங்கள். மஞ்சள்தூள், உப்புப் போட்டு முக்கால் வேக்காடாக வேகவையுங்கள். அரைக்கக் கொடுத்தவற்றை நன்கு அரைத்தெடுங்கள். அரைத்த மசாலா, கார்ன்ஃப்ளார், உப்பு ஆகியவற்றை கிழங்குடன் சேர்த்துப் பிசறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கிழங்குகளைப் போட்டுப் பொரித்தெடுங்கள்.