தேவையானவை:
- வாழைக்காய் 2,
- வரமிளகாய் 10,
- பூண்டு 6 பல்,
- உப்பு அரை கான்ஃப்ளார் ஒன்றரை டீஸ்பூன்,
- எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு, வடித்துக்கொள்ளுங்கள். பூண்டு, வரமிளகாய், உப்பு மூன்றையும் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். வாழைக்காயில் அரைத்த மசாலா, கார்ன்ஃப்ளார் போட்டுப் பிசறி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.