தேவையானவை:
- உருளைக்கிழங்கு கால் கிலோ,
- பூண்டு 100 கிராம்,
- மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்,
- உப்பு அரை டீஸ்பூன்,
- எண்ணெய் கால் கப்,
- கடுகு, உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: தோல் சீவிய உருளைக்கிழங்கையும் பூண்டையும் பொடிப்பொடியாக நறுக்குங்கள். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து, கிழங்கு, பூண்டு போட்டு வதக்கி, மிளகாய்தூள், உப்புப் போட்டுக் கிளறுங்கள். தீயை ‘ஸிம்’மில் வைத்து, மூடி விடுங்கள். சில நிமிடங்கள் கழித்துத் திறந்து கிளறி, மூடுங்கள். இப்படியே மூடிவைத்து, மூடிவைத்துக் கிளறும்போது கிழங்கு மொறுமொறுவென வெந்துவிடும். இதை சுடுசாதத்தில் அப்படியே போட்டு சாப்பிட்டால், சுவை தேவாமிர்தம்! உருளைக்கிழங்கு வாய்வுத் தொல்லைக்கு ஆகாது என நினைப்பவர்கள், இந்த முறையில் வறுவல் செய்து சாப்பிடலாம். பூண்டு இருப்பதால் வாய்வுக்கு நல்லது.