தேவையானவை:
- பிஞ்சு புடலங்காய் கால் கிலோ,
- பொட்டுக்கடலை ஒரு கப்,
- பச்சை மிளகாய் 3,
- சின்ன வெங்காயம் 7,
- மல்லித்தழை ஒரு கைப்பிடி,
- சோம்பு ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், மல்லித்தழை, சோம்பு.. இவை நான்கையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் ஒன்றிரண்டாக அடித்துக்கொள்ளுங்கள். புடலங்காயைக் கழுவி, மிகவும் பொடியாக நறுக்குங்கள். அதில் உப்பு சேர்த்துப் பிசறிவையுங்கள். பொட்டுக்கடலையைப் பொடிசெய்யுங்கள். பத்து நிமிடத்தில் புடலங்காய் தண்ணீர் விட்டுக்கொண்டு வரும். காயை தண்ணீரில்லாமல் ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன், பொட்டுக்கடலை தூள், அடித்த பச்சைமிளகாய்வெங்காயக் கலவை, துளி உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, சிவக்கப் பொரித்தெடுங்கள்.