தேவையானவை:
- பிஞ்சு வெண்டைக்காய் கால் கிலோ,
- மிளகாய்தூள் அரை டீஸ்பூன்,
- சீரகத்தூள் கால் டீஸ்பூன்,
- எலுமிச்சம்பழச் சாறு அரை டீஸ்பூன்,
- உப்பு கால் டீஸ்பூன்,
- கார்ன்ஃப்ளார் ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயைக் கழுவி, நீளவாக்கில் 6 துண்டுகளாக நறுக்குங்கள். வெண்டைக்காய், எண்ணெய் தவிர, கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். வெண்டைக்காய் துண்டுகளை அதில் போட்டுப் பிசறி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து அள்ளுங்கள். எதற்குமே தொட்டுக்கொள்ள வேண்டாம். அப்படியே சாப்பிட்டு, காலிசெய்துவிடுவார்கள் குழந்தைகள்.