...

உளுந்து சாதம்

தேவையானவை:

  • பச்சரிசி  ஒரு கப்,
  • உப்பு  தேவையான அளவு,
  • நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.

வறுத்து பொடிக்க:

  • உளுத்தம்பருப்பு  2 டேபிள்ஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய்  5,
  • சீரகம்  அரை டீஸ்பூன்,
  • கொப்பரை துருவல்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • பூண்டு  2 பல்,
  • எண்ணெய்  2 டீஸ்பூன்.

தாளிக்க:

  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • நெய்  2 டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வறுக்க கொடுத்துள்ள பொருட்களில், பூண்டு நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சிறு தீயில் சிவக்க வறுத்து, பிறகு பூண்டையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி எடுத்து பொடித்து சாதத்துடன் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, நெய் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.