தேவையானவை:
- பொட்டுக்கடலை 1 கப்,
- பச்சரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்,
- பெரிய வெங்காயம் 1,
- பச்சை மிளகாய் 2,
- பெருங்காயம் அரை டீஸ்பூன்,
- உப்பு ருசிக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியுங்கள். அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.